![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/11/ccc633-e1637664943870.jpg)
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பயண படகுப்பாதை விபத்தில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சக்கரிய்யா காலிஸா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதுவரை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பயண படகுப்பாதை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.