கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட குழுவொன்று இவ்வாரத்துக்குள் நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இக் குழுவில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு இவ்வாரத்துக்குள் நியமிக்கப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.