crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித் திட்டம் நாளை மற்றும் நாளை மறுதினம்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் “ஆரோக்கியமான நாளை” எனும் தொனிப்பொருளில் தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை நாளை (08) புதன் கிழமை மற்றும் நாளை மறுதினம் (09) வெள்ளிக் கிழமை ஆகிய இரு தினங்களும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி கே.கேதீஸ்வரன் மற்றும் கலாநிதி சி.சபானந்த் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

உடற்தகுதி பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமன்றி ஆர்வமுள்ள எவரும் குறித்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள முடியும்.

இரு தினங்களும் மதிய உணவு, சிற்றுண்டி என்பன மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிற்சிப்பட்டறையில் ஒரு அங்கமாக யோகாப் பயிற்சியும் இருப்பதனால் அதற்கேற்ற வகையில் துணி/ Yoga mat ஒன்றினைக் கொண்டுவருதல் விரும்பத்தக்கது.

பயிற்சிப் பட்டறையில் பயிற்சிக்குப் பொருத்தமான உடையுடன் கலந்துகொள்ளலாம்.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவு உத்தியோகத்தரை 0772844614 / 0714897735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இரு நாள் பயிற்சிநெறியில் கலந்துகொள்பவர்களுக்கு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 4 =

Back to top button
error: