இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றமையால் எதிர்வரும் பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இல்லையேல் பண்டிகை கொத்தணி என்ற மற்றுமொரு கொவிட் கொத்தணி உருவாகக்கூடும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இதுபோன்ற ஒரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
பண்டிகை காலங்களில் பொது மக்கள் கட்டுப்பாடின்றி செயற்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எனவும், தற்போதுள்ள சாதாரண வாழ்க்கை நிலை பாதிக்கப்படலாம் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.