இலங்கை அரசாங்கத்திடமிருந்து கலாநிதி பட்டங்களுக்காக நிதியைப் பெற்று அதனை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை (EPF) வழங்காமலிருப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அத்தகைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமக்கான ஓய்வூதியத்தை பெறும்போது, அவர்கள் செலுத்தவேண்டிய தொகையை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து குறைத்துக் கொள்ளவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.
இதற்காக அரசாங்கத்தினால் பல இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் நாட்டின் 12 பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறு 12,000 விரிவுரையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.