crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிவாயு அடுப்பு வெடித்து தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு

கண்டி – குண்டசாலை நாட்டரன்பொத பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த முதலாம் திகதி சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயம் அடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெண் ஒருவர பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வில்கமுவ, தேவகிரிய, பிதுருவெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் குண்டசாலை பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று காலை குறித்த பெண் சமைக்க தயாராகிக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிவாயு விபத்தினால் குறித்த பெண் உயிரிழந்துள்ள போதும் விபத்துக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 + = 29

Back to top button
error: