crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிவாயு அடுப்பு வெடித்து இறந்த பெண்ணின் குடும்பம் எரிவாயு நிறுவனத்திற்கு வழக்கு

கண்டி – குண்டசாலை நாட்டரன்பொத பிரதேசத்தில் வீடொன்றில் கடந்த முதலாம் திகதி சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயம் அடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக நேற்று (12) உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர்

உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அல்லது எவ்வித பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் தேடி பார்க்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வில்கமுவ, தேவகிரிய, பிதுருவெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 37 = 39

Back to top button
error: