இலங்கை தர நிர்ணய நிர்வனத்தின் (SLSI) நியமங்களுக்கு அமைவாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று (18) முதல் விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் கடந்த நான்கு நாட்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது