crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 100-ஐத் தாண்டியது

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று உறுதியானது. தற்போது மகாராஷ்டிரா 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, குஜராத்தில் தலா 8, ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

யூனியன் பிரதேசங்கள் உள்பட 11 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 36 =

Back to top button
error: