நுரைச்சோலை அனல் மின் நிலையம் அதன் முழுமையான உற்பத்தித் திறனை வழங்காத நிலை காணப்படுவதனால் நாட்டின் சில பிரதேசங்கள் மின்வெட்டை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தால் வழங்கப்படும் 900 மெகாவாற்றின் முழுக் கொள்ளளவையும் தேசிய மின் கட்டமைப்பிற்கு இணைப்பதற்கான நடவடிக்கைகளின் அடிப்படையில், அதனை பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சில பகுதிகளில் அதி கூடிய கேள்வி காலப்பகுதியான இரவு வேளையில் சுமார் 30 – 45 நிமிடங்கள் வரை மின்சார விநியோகம் தடைப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.