crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை 250,925,169 அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஈரானுக்கு திருப்பி செலுத்த நடவடிக்கை

செலுத்த வேண்டிய கடனை இலங்கை தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக நிவர்த்தி

இலங்கை அரசாங்கம் கடந்த பல வருடங்களாக நிலுவையில் காணப்பட்டு வந்த 250,925,169 அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஈரானுக்கு திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஈரானின் தேசிய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியிருந்தது. இந்த நீண்ட கால கடனை இலங்கை தேயிலையினை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாகவே நிவர்த்திக்கப்படவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (21) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் ஈரானின் வர்த்தக மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர் Alireza Paymanpak ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான கனகா ஹேரத், தாரக பாலசூரிய, இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹாசீம் அஷாட் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

எரிபொருள் கொள்வனவு நிலுவையினை தேயிலை ஏற்றுமதி செய்வது தொடர்பான செயற்திட்டம் தொடர்பான விடயங்களே ஒப்பந்தத்தில் உள்ளக்கடக்கட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 7

Back to top button
error: