crossorigin="anonymous">
வெளிநாடு

தொழிலதிபர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.150 கோடி பறிமுதல்

இயந்திரங்கள் உதவியுடன் பணத்தை எண்ணும் பணி

இந்தியா – உத்தர பிரதேசத்தில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுகட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை எண்ண முடியாமல் அதிகாரிகள் சோர்ந்தனர். பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ்ஜெயின். இவர், ‘திருமூர்த்தி பிராக்ரன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நறுமண திரவியம் தயாரித்து உள்நாடு, வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறார். இதுதவிர வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். வெளிநாடுகளிலும் இவருக்கு கிளைகள் உள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான பியூஷ் ஜெயின், கடந்த நவம்பரில் ‘சமாஜ்வாதி அக்தர்’ என்ற வாசனை திரவியத்தை அறிமுகம் செய்தார். இந்த விழாவில் அகிலேஷ் யாதவ் உட்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் இணைந்து பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கான்பூர், கன்னோஜி, மும்பை மற்றும் குஜராத் உட்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைநடத்தப்பட்டது. இதில் பியூஷ் ஜெயினின் கான்பூர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் எண்ணத்தொடங்கினர். 500 ரூபாய் நோட்டுகள்பார்சல் செய்யப்பட்டு கட்டுகட்டாகமலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பணத்தை எண்ண முடியாமல் சோர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்டேட் வங்கி அலுவலர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் பணம் எண்ணும் இயந்திரங்களுடன் வந்து இடைவிடாது பணத்தை எண்ணி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி பியூஷ்ஜெயின் வீட்டில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இயந்திரங்கள் உதவியுடன் பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் பியூஷ் ஜெயின் ரூ.800 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து அவரிடம் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 26

Back to top button
error: