crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரபல பாடசாலை அதிபர் இலஞ்சம் பெற முற்பட்டபோது கைது

கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் மாணவன் ஒருவனை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற முற்பட்ட வேளையில் இலஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிபர் மாணவனை பாடசாலையில் தரம் 7 இல் சேர்ப்பதற்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியதாக மாணவனின் பாதுகாவலர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனடிப்படையில் அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தேக நபரான அதிபர் பணத் தொகையை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: