தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தேயிலை மீள் நடுகை மற்றும் புதிதாக தேயிலை உற்பத்திக்காக சிறிய தேயிலை அபிவிருத்தி அதிகார சபை இலவசமாக கன்றுகளை வழங்கவுள்ளது. இத்துறையிலான சந்தையை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இதேவேளை தெங்கு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.