crossorigin="anonymous">
வெளிநாடு

மியான்மார் இராணுவத்தால் கொல்லப்பட்ட உடல்கள் கண்டெடுப்பு – மனித உரிமை அமைப்பு

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்தும் மியான்மார் இராணுவம் தாக்குதல்

மியான்மரின் கயா நகரில் இராணுவத்தால் கொல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை மனித உரிமை அமைப்பான ‘காரென்னி’ உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து காரென்னி அமைப்பு வெளியிட்ட தகவலில், “மியான்மரின் கயா நகரில் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரும் அடங்குவர். மியான்மர் ராணுவத்தின் இந்த மனிதத் தன்மையற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு மியான்மர் அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை

மியான்மரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் மக்களை ராணுவம் தாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அங்குள்ள சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராகவும், ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 35 + = 44

Back to top button
error: