crossorigin="anonymous">
உள்நாடுபொது

5,000 ரூபாய் உதவித் தொகையைப் பெற தகுதியுடையோர் விபரம்

ஜனாதிபதி கொவிட்19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய – ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படவிருக்கும் 5,000 ரூபாய் உதவித் தொகையைப் பெற தகுதியுடையோர் விபரம் வருமாறு

  1. நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்பங்களுக்கும் இது உரித்தாகும்.
  2.  சமுர்த்தி பெறும் குடும்பங்கள்.
    3. சமுர்த்திபெற தகுதியிருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்.
    4. 70 வயதைக் கடந்த முதியவர்கள்.
    5. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவுக்கான முத்திரையைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.
    6. மாற்றுத் திறனாளிகள்.
    7. இதுவரை கொடுப்பனவைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.
    8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும்.
    9. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்.
    10. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனலைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் – அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட கொடுப்பனவுகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவர்.
    11. இந்த உதவி தொகையை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்களூடாக மக்கள் பெற முடியும்.

இந்த சேவையை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 10 = 16

Back to top button
error: