crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான இறுதி அமர்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் 55வது மாதாந்த சபை அமர்வும், 45வது பொது அமர்வும் நேற்று (28) மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது

இம் மாதாந்த சபை அமர்வில் முடிவுறுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மேலும், மாநகரசபையின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் கொள்வனவிற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இதுதவிர அன்மையில் மாரடைப்பு காரணமானக காலமான மாநகர சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர் அமரர் வே.தவராஜாவிற்கம், மாநகர முதல்வர் தி.சரவணபவனின் தாயாருக்கும் அஞ்சலி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டிற்கான இறுதிக் கூட்டமாகையினால் மிகவும் முக்கியமான தீர்மானங்கள் மாநகர சபையின் முதல்வரினால் சபையில் எடுக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + = 14

Back to top button
error: