crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடியில் அதிபர்கள் பராட்டி கௌரவிப்பு

காத்தான்குடி முதலாம் குறிச்சியில் இரண்டு பாடசாலைகளின் அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்கள இருவரை முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாயலினால் நேற்று (28) கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த அந் நாசர் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய எம்.ஏ.அல்லாஹ்பிச்சை மற்றும் ஸாவியா மகளிர் வித்தியால அதிபராக கடமையாற்றிய திருமதி நயீமா அப்துஸ்சலாம் ஆகியோரே  கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாயலின் தலைவர் மௌலவி எம்.ஐ. ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ். உமர்மௌலானா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன்போது காத்தான்குடிக் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், பள்ளிவாயலின் உப தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.சவாஹிர் உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பகுதியிலுள்ள அந் நாசர் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய எம்.ஏ.அல்லாஹ் பிச்சை மற்றும் ஸாவியா மகளிர் வித்தியால அதிபராக கடமையாற்றிய திருமதி நயீமா அப்துஸ் சலாம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு பின்தங்கிய இப்பிரதேசத்திலுள்ள இவ்விரு பாடசாலைகளினது பௌதீக வளர்ச்சிக்காவும், மாணவர்களை கல்வித்துறையில் தரம் உயர்த்துவதற்காகவும் மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.

ஒன்றரை தசாப்பதகாலமாக இப்பாடசாலைகளின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் கல்வி உயர்ச்சிக்காகவும் இவ்வதிபர்கள் பாடுபட்டமைக்காக இக்கௌரவம் பள்ளிவாயல் நிர்வாகத்தினால் வழகிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − = 32

Back to top button
error: