crossorigin="anonymous">
உள்நாடுபொது

பால் மா விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகள்

01. 400 கிராம் ரூ. 60 இனாலும்
02. கிலோகிராம் ரூ. 150 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் புதிய விலைகள்

01. 400g – ரூ. 540
02. 1kg – ரூ. 1,345

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்புக்கமைய, தற்போது 400 கிராம் பால் மா பொதி ரூ. 480 ஆகவும், 1 கிலோ கிராம் பால் மா பொதி ரூ. 1,195 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக ஏற்பட்டுள்ள டொலர் விலை அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யும் எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − = 60

Back to top button
error: