crossorigin="anonymous">
உள்நாடுபொது

2021 யில் இலஞ்சம் பெற்ற 36 பேர் கைது

2021 யில் இலஞ்சம் பெற்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலாளர் அப்சரா கல்தேரு தெரிவித்தார்.

2021 காலப்பகுதியில் 70 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் செயலாளர் அப்சரா கல்தேரு தெரிவித்தார்.

33 சுற்றிவளைப்புகளில் அவற்றுடன் தொடர்புடைய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பிரதேச சபை உறுப்பினர், இரண்டு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்களும் அடங்குகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 5

Back to top button
error: