இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களில் பொறுத்தப்படடுள்ள வால்வுகளை (Valve) மாற்றி புதிய வால்வுகளை எரிவாயு சிலிண்டர்களில் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளன.
கலந்துரையாடலில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், சுங்கப் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.