crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி, பிரதமர் மலரும் புது வருட மத அனுஷ்டானங்களில்

ஜனாதிபதி, பிரதமர் கிரிவெஹெர ரஜமஹா விஹாராதிபதியை சந்திப்பு

மலரும் புது வருடத்துக்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய பூமியில் இடம்பெறுகின்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கிரிவெஹெர ரஜமஹா விஹாராதிபதி சங்கைக்குரிய கொபவக்க தம்மிந்த தேரர் அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

கிரிவெஹெர ரஜமஹா விஹாரைக்கு இன்று (31)  வருகை தந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், தம்மிந்த தேரரைச் சந்தித்து, தேரரின் நலன்களை விசாரித்தறிந்ததுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், தென் மாகாண ஆளுநர் விலீ கமகே மற்றும் ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 − = 54

Back to top button
error: