crossorigin="anonymous">
வெளிநாடு

பெண்ணை துண்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம்’

போப் பிரான்சிஸ் தனது புத்தாண்டு உரை

ஒரு பெண்ணை துண்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம் என போப் பிரான்சிஸ் தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று (01) ரோம் நகரில் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது

“தாய் தான் நமக்கு உயிர் கொடுக்கிறார். பெண் தான் இந்த உலகை இணைத்து வைத்திருக்கிறார். ஆகையால் நாம் அனைவரும் தாய்மார்களை மேம்படுத்தவும், பெண்களை பாதுகாக்கவும் இணைந்து செயல்படுவோம்.

ஒரு பெண்ணுக்கு எதிராக எவ்வளவு வன்முறையைத் தான் இந்த உலகம் கட்டவிழ்க்கும். ஒரு பெண்ணைக் காயப்படுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம். இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார்.

கடந்த மாதம் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ், பெண்கள் மீது வன்முறையைக் கடத்துபவர்கள் சாத்தான் போன்றவர்கள்” என்றார்.

கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலந்தொட்டு போப் பிரான்சிஸ் குடும்ப வன்முறை குறித்துப் பலமுறை பேசியிருக்கிறார். ஏனெனில் கரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 + = 34

Back to top button
error: