2022 புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜையை கோட்டே சுனேத்ராராமாதிபதியும் கொழும்பு, களுத்துறை பகுதிகளின் தலைமை தேரரும், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக ஆளுநர் சபை அங்கத்தவரும், கல்வி அமைச்சின் பௌத்த ஆலோசகர் குழுவின் உறுப்பினருமான நாலந்தா பல்கலைக்கழக தர்மாச்சாரியார் வணக்கத்துக்குரிய அலிக்கேவெல சீலானந்த தேரர் நடாத்தினார்.
இந்நிகழ்வில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சி முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக, பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற பணியாட்களின் பௌத்த சங்கத்தினரால் இந்த ஆசீர்வாத போதி பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது