crossorigin="anonymous">
உள்நாடுபொது

53,177 பட்டதாரிகளுக்கு அரசாங்க சேவையில் நிரந்தர நியமனம்

21ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்

53,177 பட்டதாரிகளுக்கு ஜனவரி 03ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்க சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பொது நிர்வாக அமைச்சில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் தெரிவித்தார்.

பட்டதாரிகளில் 700 பேரின் நிரந்தர நியமனத்துக்கான கடிதம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னரே வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், அவர்களது ஒருவருட பயிற்சி மார்ச் மாதத்தில் நிறைவடைவதே அதற்குக் காரணமென்றும் தெரிவித்துள்ளார்.

நிரந்தர நியமனம் பெற்றுள்ளவர்களுள் 21ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படும் பட்டதாரிகள் அமைச்சுக்கள், மாகாண சபைகள், திணைக்களங்கள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகங்களின் கீழ் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 78 = 81

Back to top button
error: