crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை மக்கள் வங்கி – சீன நிறுவனத்திற்கு ரூ.498 கோடிக்கு மேல் செலுத்தியது

சீனாவின் கடும் அழுத்தம்

இலங்கை அரச வங்கியயான ‘மக்கள் வங்கி’ சீன நிறுவனத்துடன் நீடித்து வந்த சர்ச்சையைத் தீர்ப்பதற்காக நேற்று (07) வெள்ளிக்கிழமை 498 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளது.

சீன நிறுவனமான குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனம், இலங்கைக்கு கரிம உரத்தை அனுப்பியிருந்தது, ஆனால், அதில் குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

கொழும்பின் வர்த்தக மேல் நீதிமன்றம் குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனம் பணம் செலுத்துவதற்கான தடையை நீக்கியதை அடுத்து இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த விவகாரத்தில் சீன நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான சிலோன் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் இந்த கொடுப்பனவை நிறுத்துவதற்கு மேல் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தது. இந்த உத்தரவின் காரணமாக, சீன நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட கடன் கடிதத்தின் கீழ் பணம் செலுத்த முடியாது என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கம் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் நச்சு உரம் ஏற்றுமதியை ஏற்க மறுத்துள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில், பணம் செலுத்தாததால், சீன தூதரகத்தால், இலங்கை மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: