சீன வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹி (Wang Yi) உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வருகிறார்.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துக்கொள்ள சீன அமைச்சர், இலங்கை வருவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.