சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) அவர்களுக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில், அலரி மாளிகையில் இன்று (09) சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பினை தொடர்ந்து கீழ்வரும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
01. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை
02. கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான மானிய வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்
03. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்
04. சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை அம்பியுலன்ஸ்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்