தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, அம்பாறை மாவட்டத்துக்கு புகழ் ஈட்டித் தந்துள்ள நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்களுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
தேசிய மட்டத்திலான கபடி போட்டியில், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் (10) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை நேற்று (11) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.