![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/court-judgment-e1642002852617-780x470.jpg)
இலங்கையில் 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை, அவ்வழக்கை விசாரித்த கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) அறிவித்தனர்.
2012 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். ஆயினும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் கிடைத்தமை அடிப்படையில் சட்ட மாஅதிபரினால் குறித்த குற்றச்சாட்டுகள் முன்கொண்டு செல்லப்பட்டது.