இலங்கை முழுவதும் 11 – 17 ஆம் திகதி வரை விசேட தடுப்பூசி வாரம் நடைமுறைப்படுத்துவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேலதிகமாக நான்கு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கப்படும் அனைத்து நிலையங்களிலும் இரவு 8.00 மணி வரை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.