![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/rs-5000-e1642087647105-780x470.jpg)
பொதுச் சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரத்னசிறியினால் அரச ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ரூ. 5,000 மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவு ஒரு வருடத்திற்கு மாதாந்தம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.