![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/corona-antigen-test-e1642091894203-780x470.jpg)
அம்பாறை – கல்முனை பிராந்தியத்தில் உள்ள கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் அலுவலகத்தில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்ரிஜன் பரிசோதனையில் 8 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.
சுமார் 31 உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர்கள், தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.