பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/university1-e1642127487118.jpg)
முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் உள்ளடக்கிய மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (12) வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
இப் பொங்கல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தைப் பொங்கலை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற அதேவேளை கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக நடாத்தப்படவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு அதிக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகிய மாணவர்கள் இப் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் பொங்கலை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2022ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற்றன. நிகழ்வில் அதிகளவு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது