
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைத்திருநாளில் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இன்றைய தினம் (14) தைத்திருநாளை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் தைத்திருநாளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிக விமர்சையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும், அரச மற்றும் தனியார் துறை சார்ந்த அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட வீடுகளிலும் அதிகாலை சூரிய உதயத்திலேயே பொங்கல் பொங்கி சூரியபகவானுக்கு படைத்து, நன்றி செலுத்தி பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியுடன் சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.