
நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு தயாராக இருக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவதால் பாரிய மின்வெட்டு ஏற்படக்கூடும் எனவும் இதனால் நாளாந்தம் நான்கு மணித்தியாலங்கள் மின் வெட்டுக்கு தயாராக இருக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார்.
22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளது. சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபையிடம் காணப்படுகின்றது.
மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி, மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்