crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அக்குறணை றசீதியா கலாபீட புதிய அதிபராக அனஸ் முஹம்மத்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கண்டி – அக்குறணை றசீதியா கலாபீடத்திற்கு புதிய அதிபராக அஷ்ஷேக் அனஸ் முஹம்மத் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்குறணை தெழும்புகஹவத்தை, றசீதியா அறபுக் கற்கைகள் கலாசலையின் அதிபராக நியமனம் பெற்றுள்ள இவர் கண்டி, மடவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பேருவலை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் இணைந்து தனது உயர்கல்வியையும் இஸ்லாமிய சமய கற்கைகள் தொடர்பான உயர் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்தவராகும்.

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான இவர் ஆபிரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகளுக்கான ‘சீரா’ பிரிவில் உயர்கல்வி டிப்லோமாவையும் பெற்றுள்ளார். ‘சீரா தாரிப்’ போன்ற சமய கற்கைத்துறைகளில் விசேட பயிற்சிகள் பலவற்றைப் இவர் பெற்றுள்ளார்.

இந்தியாவில் இடம் பெற்ற இஸ்லாமிய மாணவர் வழிகாட்டல் பாடநெறிகள் பலவற்றில் முக்கிய பங்களிப்புக்கள் பலவற்றைச் செய்துள்ளார். ஆரம்பகாலத்தில் இவர் கண்டி மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றான வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

திஹாரியில் இயங்கும் ‘பாத்திஹ் எக்கடமி’ என்ற கல்வி நிறுவனத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியுள்ளார். நாடறிந்த சமூக நன்னடத்தை ஊக்குவிப்பு மற்றும் ஆன்மீகப் பேச்சாளரான இவர் நாட்டின் பலபாகங்களிலும் நூற்றுக் கணக்கான கருத்தரங்குகளை நடத்தி பலரது மனதையும் வென்றவராகும்.

‘ஹிப்ளு’ மற்றும் ‘சரீஹா’ பாடநெறிகளைக் கொண்ட மேற்படி அக்குறணை றசீதியா கலாபீடத்தின் வளர்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் இவரது நியமனம் உறுதுணையாக இருக்கும் என அதன் நிர்வாகம் எதிர்பாத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ. றஷ்மி மொகமட் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 + = 90

Back to top button
error: