இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடமாடும் சேவையை ஆரம்பிக்கப் போவதாகவும் அதற்காக நடமாடும் தடுப்பூசி மத்திய நிலையங்களை ஸ்தாபிக்கத் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் விசேட தடுப்பூசித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையை கவனத்திற்கொண்டு மிகவும் விரைவாக மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அதிகமாக இனங்காணப்பட்டு வருகின்றனர். மக்கள் மிக விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.