crossorigin="anonymous">
விளையாட்டு

சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்ட பேட்டிகள்

சுதந்திரக் கிண்ண உதைபங்தாட்ட சிலோன் மாகாண லீக் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 2ஆம், 3ஆந் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சினால் நாட்டின் விளையாட்டுத் துறையினை மேம்படுத்தும் நோக்குடன் எதிர்வரும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 பெரும் விளையாட்டு போட்டிகளை 2023 ஆம் ஆண்டுவரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டின் தேசிய உதைபந்தாட்ட அணியினைத் தெரிவு செய்யும் நோக்குடன் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் அடங்கிய 8 அணிகள் கொண்ட சிலோன் மாகாண லீக் போட்டிகள் நாடுபூரகவும் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக தென் மற்றும் வட மாகாணங்களுக் கிடையிலான போட்டி பெப்ரவரி 2ஆந் திகதியும், ரஜரட்ட மற்றும் மேல் மாகாணங்களுக் கிடையிலான போட்டி பெப்ரவரி 3ஆந் திகதியும் வெபர் மைதானத்தில் பி.ப. 2.30 மணி முதல் இடம்பெறவுள்ளன.

மட்டக்ளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டிகளுக்கு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசின் உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் உட்பட உதைபந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 5 = 8

Back to top button
error: