இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 07 பேர் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இருவர், தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று (01) கையளித்தனர்.
டென்மார்க், எஸ்டோனியா, பாகிஸ்தான், காம்பியா, கசகஸ்தான், பிலிப்பைன்ஸ், ஒஸ்ரியா, ஐஸ்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தர்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கையிலிருந்தும் பிலிப்பைன்ஸ் தூதுவர் பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்தும், ஏனைய தூதுவர்கள் இந்தியாவின் புதுடில்லியிலிருந்துமே, தமது இராஜதந்திரப் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.
1. டென்மார்க் தூதுவர் – ப்ரெட் ஸ்வேன் அவர்கள் (Mr. Freddy Svane)
2. எஸ்டோனியா தூதுவர் – கெட்ரின் கிவ் அம்மையார் (Ms. Katrin Kivi)
3. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் ஃபாருக் பர்க்கி அவர்கள் (Maj. Gen. (Retd.) Umar Farooq Burki)
4. காம்பியா உயர்ஸ்தானிகர் – முஸ்தஃபா ஜவாரா அவர்கள் (Mr. Mustapha Jawara)
5. கசகஸ்தான் தூதுவர் – நூர்லன் ஸல்கஸ்பயெவ் அவர்கள் (Mr. Nurlan Zhalgasbayev)
6. பிலிப்பைன்ஸ் தூதுவர் – அலன் டெனிகா அவர்கள் (Mr. Alan Deniega)
7. ஒஸ்ரியா தூதுவர் – கெத்தரினா வைஸர் அம்மையார் (Ms. Katharina Wieser)
8. ஐஸ்லாந்து தூதுவர் – கட்னி பிரகசன் அவர்கள்
9. இஸ்ரேல் தூதுவர் – நாஓர் கிலொன் அவர்கள் (Mr. Naor Gilon)
இந்நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே மற்றும் தலைமைக் கூட்டமைப்பு அதிகாரி செனரத் திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.