கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை பொதி 4 மாதமாக இல்லை
(நதீர் சரீப்தீன்)
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை சுகாதார வைத்திய பிரிவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசாங்கம் வழங்கும் போசணைப் பொதிகள் கடந்த நான்கு மாதங்களாக கிடைக்கப்பெறவில்லை என பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு. மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான போசணை பொதிகள் பத்து மாதங்களுக்கு வழங்குகிறது. இவை கூட்டுறவு கடைகளிலும் அங்கிகாரம் பெற்ற தனியார் கடைகளிலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
ஆனால் கடந்த 2021 ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் நான்கு மாதங்களாக போசணை பொதிகள் பெற முடிவதில்லை இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என வினியோக நிலையங்களில் தெரிவிக்கப்படுவதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசாங்கம் இலவசமாக வழங்கும் இப்போசணை பொதிகளை தடையின்றி பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தருமாறு பிரதேச கர்ப்பிணி தாய்மார்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.