இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் (04) வாழ்த்துச் செய்தி
நம் தேசத்தின் 74 ஆவது சுதந்திர தினத்தை நாம் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை உட்பட முழு உலகிற்கும் கடந்த இரு வருடங்களாக பெரும் சவாலாக காணப்படும் கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவுரா நிலையில் நாம் இச்சுதந்திர தினத்தை அடைந்துள்ளோம்.