கண்டி மாவட்ட செயலகமும் குண்டசாலை பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்டி மாவட்டத்தின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் நத்தரன்பொத பிரதேசத்தில் இன்று (04) நடைபெற்றது
இதன்போது கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தேசிய கொடியை ஏற்றுவதையும் அதன் பின்னர் சுதந்திர தினத்தினை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்று ஒன்றை நட்டு மரம் நடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதையும் இதன்போது கலந்துகொண்ட மாணவர்கள் மாற்று அதிகாரிகளையும் படங்களில் காணலாம்