மட்டக்களப்பு கல்குடா கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் புதிய தொழிநுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (05) சனிக்கிழமை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் எனும் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிற்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் கட்டிட தொகுதி அமைக்கப்படவுள்ளது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹன லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன், வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட கோட்டக்கல்லி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாணவர்களின் பேற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.