இலங்கைக்கான விஜயமொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய வெ ளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இலங்கையில் 7 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாடு இம்முறை நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மார்ச் 31 ஆம் திகதி பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. 7 நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது இலங்கை கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மாநாட்டில் பங்கேற்பதற்காக 7 நாடுகளின் தலைவர்களுக்குமான அழைப்பை விடுத்துள்ளது