இலங்கை சுகாதார அமைச்சு மரணங்களின் போதான பிரேத பரிசோதனைக்கு பி சி ஆர் (PCR) கட்டாயம் இல்லை என தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அல்லது மருத்துவமனையில் அல்லாத அனைத்து மரணங்களுக்கும் பிரேத பரிசோதனைக்கு பி சி ஆர் கட்டாயமில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசியம் ஏற்படின் சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) விருப்பத்தின் பேரில் பி சி ஆர் சோதனை மேற்கொள்ளலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பி சி ஆர் பரிசோதனையில் மரணம் கொவிட்-19 தொடர்பானது என கண்டறியப்பட்டால், ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமைய சடலத்தை அகற்றும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும், அது மறுஅறிவிப்பு வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர், அசேல குணவர்தன அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.