crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு மாநகர சபையின் 57வது மாதாந்த சபை அமர்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் 57வது மாதாந்த சபை அமர்வும் இன்று (17) மணிக்கு மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில்
நடைபெற்றது .

 

கடந்த காலங்களில் மாநகர சபைக்கான நீதி மன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டசட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், மாநகரசபையின் பொறுப்பில் காணப்படும் சூரிய மின்கலங்கள் பழுதடைந்து காணப்படுவதினால் அதனை பழுதுபார்த்து மீண்டும் பாவனைக்கு உட்படுத்துவதனால் மாநகரசபையின் மின்சார பாவனை
கொடுப்பனவினை குறைப்பதுடன், வீதியில் காணப்படும் சூரிய சக்தி மின் விளக்குகளும் பழுதுபார்த்து பாவனைக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை
வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் மாநகரச பையின் மேற்கொள்ளப்பட்ட வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை மிக விரைவாக மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ் மாதாந்த சபை அமர்வில் முடிவுறுத்தப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய
வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: