crossorigin="anonymous">
உள்நாடுபொது

இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறி அவர்களும்

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.டீ.பாடிகோரால அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, புதிய செயலாளர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கே.ஜீ.விஜேசிறி அவர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளராகச் சேவையாற்றியுள்ளதோடு, எஸ்.டீ.பாடிகோரால அவர்கள், திருகோணமலை மாவட்டச் செயலாளராகச் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: