crossorigin="anonymous">
வெளிநாடு

புதிய வகை ‘லஸ்ஸா’ வைரஸ் காய்ச்சல் தொற்று, குழந்தை மரணம்

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால் இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன.

இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் லுடன் அன் டன்ஸ்டபிள் மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய்த் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இந்த குழந்தையும் ஒன்று. இதில் இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அட்டன்புரூக் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இந்த இரண்டு மருத்துவமனைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நோயாளிகளின் தொடர்பில் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் கிழக்கு இங்கிலாந்து பிரிவு இதனை ‘பெரிய வட்டார சம்பவம்’ என்று அறிவித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமையான ‘உக்சா’ (UKHSA) லஸ்ஸா காய்ச்சல் மரணம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், தொடர்புத் தேடல் நடவடிக்கைகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மூவருக்கும் ஏற்பட்ட தொற்று மேற்கு ஆப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தோடு தொடர்புடையது என்று உக்சா முதன்மை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

உணவு, வீட்டு உபயோகப் பொருள்களில் தன் சிறுநீர், மலத்தை கலப்பதன் மூலம் மனிதர்களுக்கு லஸ்ஸா வைரசை பரப்பும் சாத்தியமுள்ள ஓர் எலியுடன், சியரா லியோனில் ஒரு சுகாதாரப் பணியாளர்.

பத்தாண்டுகளுக்கு மேலான காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இந்த லஸ்ஸா காய்ச்சல் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது.

லஸ்ஸா காய்ச்சல் ஏற்பட்ட பெரும்பாலோர் குணமடைந்துவிடுவார்கள். சிலருக்கு நோய் தீவிரமடையலாம்.

இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 3 தொற்றுகளுக்கு முன்பாக, பிரிட்டனில், 1980 முதல் 8 பேருக்கு மட்டுமே இந்த காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக இருவருக்கு 2009ல் இந்த நோய் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றிய எலிகளின் சிறுநீர், மலம் கலந்த உணவு அல்லது வீட்டு உபயோகப் பொருள்களுடன் ஏற்படும் தொடர்பு வாயிலாகவே இந்த தொற்று பொதுவில் பரவுவதாக இந்த நோய்க்கான வழிகாட்டுக் குறிப்பு கூறுகிறது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 − = 76

Back to top button
error: