crossorigin="anonymous">
உள்நாடுபொது

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள்

திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் நேற்று (28) கையளித்தார்.

மிக நீண்டதூரம் பயணம் செய்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் இந்த வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக நிலவிவந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சு இந்த அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைத்துள்ளது.

நிகழ்வில் திருக்கோவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.பி. மஸ்கூத், பொத்துவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டீ. எஸ்.ஆர்.டீ. ஆர். றஜாப் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸிடமிருந்து அம்புலன்ஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 + = 29

Back to top button
error: